திருநெல்வேலி: இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு கொண்டாட தயாராகி வரும் நிலையில் மத்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பேரணியாக ஆகஸ்ட் 14ஆம் தேதி டெல்லி சென்று சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த இருசக்கர பேரணி கடந்த சில நாள்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் இன்று (ஜூலை 04) நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் நேரடியாக வந்த போலீசார் ரயில்வே போலீசாரின் சாதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
அதுபோல ரயில் பயணிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கினர். இந்த குடிநீர் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் வழங்கப்படும் என தெரிவித்த அவர்கள், மதுரை கோட்டத்தில் 10 ரயில் நிலையத்தை தேர்ந்தெடுத்து அங்கு செல்வதாகவும் அது போல தியாகிகளை இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு மரியாதையை செலுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சகோதரர்களை தேடி கண்டுபிடித்து சந்தித்த பாகிஸ்தான் சகோதரி!