ETV Bharat / state

சிகிச்சைக்கு சென்ற முதியவர் - எய்ட்ஸ் நோய் என தவறாக அறிக்கை அளித்த தனியார் மருத்துவமனை - கால் வீக்கம் சிகிச்சைக்கு சென்ற முதியவர் எய்ட்ஸ் நோய் என தவறாக சொன்ன மருத்துவமனை

திருநெல்வேலியில் சிகிச்சைக்கு சென்ற முதியவருக்கு எய்ட்ஸ் நோய் என தவறான மருத்துவ அறிக்கை அளித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் கால் வீக்கம் சிகிச்சைக்கு சென்ற முதியவர் - எய்ட்ஸ் நோய் என தவறாக சொன்ன மருத்துவமனை OR உங்களுக்கு எய்ட்ஸ் இருக்கு : 74 வயது முதியவரை அதிர்ச்சியில் ஆழ்த்திய தனியார் மருத்துவமனை

author img

By

Published : Jun 9, 2022, 9:49 AM IST

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை கோட்டூரை சேர்ந்தவர் அக்பர் அலி. (74) இவருக்கு கால் வீக்கம் ஏற்பட்டதையடுத்து அவரின மகன் மைதீன் பிச்சை பாளையங்கோட்டையில் உள்ள சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் தனியார் மருத்துவமனையில் அக்பர் அலியை சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர் சர்க்கரை நோய் இருப்பதால் காலில் ஒரு விரலை அறுவைசிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக இரத்த பரிசோதனை மேற்கொண்ட போது அக்பர் அலிக்கு எச்ஐவி தொற்று இருப்பதாக மருத்துவமனையில் கூறியுள்ளனர்.

உங்களுக்கு எய்ட்ஸ் இருக்கு : 74 வயது முதியவரை அதிர்ச்சியில் ஆழ்த்திய தனியார் மருத்துவமனை

இதைக்கேட்டு அக்பர் அலி அவரது மகன் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவசர அவசரமாக அக்பர் அலியை டிஸ்சார்ஜ் செய்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அதேசமயம் நெல்லை அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதனை மேற்கொண்ட போது அக்பர் அலிக்கு எச்ஐவி தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

இதனிடையே இல்லாத நோயை இருப்பதாகக் கூறி தவறான மருத்துவ அறிக்கை வழங்கிய தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அக்பர் அலியின் மகன் மற்றும் உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் இல்லாத நோயை இருப்பதாகக் கூறி தவறான மருத்துவ அறிக்கை அளித்துள்ளனர்.

அக்பர் அலி மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தற்போது தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வரும் நிலையில் எச்ஐவி போன்ற மிகக் கொடிய நோய் இருப்பதாகத் தவறாகக் கூறியதால் அவர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். வீட்டை விட்டு வெளியே வருவதற்குத் தயங்குகிறார் எனவே சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்று கூறினார்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த கொடூரச் சம்பவம் - தீவிர விசாரணையில் அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.