திருநெல்வேலி: மாநகர பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களிடையே பயணிகள் ஏற்றுவது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு தனியார் பேருந்து நடத்துநர் சுபாஷ் என்பவர் தினமும் பேருந்துகளில் குறைவான பயணிகள் ஏற்றி வந்துள்ளார்.
இதனால், பேருந்தில் வசூல் மிக குறைவாக இருப்பதாக பேருந்தின் உரிமையாளர் அவரை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் நின்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கரபாண்டி மற்றும் நடத்துநர் இசக்கி பாண்டி ஆகியோரிடம், “எங்கள் பேருந்துக்கு முன்பு நீ சென்று பயணிகளை ஏற்றிச் செல்வதால் எங்கள் பேருந்தில் யாரும் ஏறுவதுயில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது திடீரென சுபாஷ் தனது கையிலிருந்த அரிவாளை எடுத்து ஓட்டுநர் சங்கரபாண்டியை வெட்டியுள்ளார். இதில் சங்கரபாண்டி காயமடைந்தார். அங்கிருந்து சுபாஷ் தப்பிக்க முயன்றபோது அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவலர் அருணாசலம் அவரை விரட்டிச் சென்று தைரியமாக மடக்கிப் பிடித்தார்.
பின்னர், அவரது கையில் இருந்த அரிவாளை பிடிங்கினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த ஓட்டுநர்கள் சுபாஷை கடுமையாக மற்ற ஓட்டுநர்கள் தாக்கினர். இதைத்தொடர்ந்து சுபாஷ்-ஐ பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருட்டு பைக்கில் வந்து பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது!