திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரத்து 924 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மாவட்டம் முழுவதும் ஐந்தாயிரத்து 884 ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் அனைவரும் அஞ்சல் வாக்களிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்குப்பதிவு தொடக்கம்! - திருநெல்வேலி அண்மைச் செய்திகள்
திருநெல்வேலி: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்று (மார்ச் 26) தொடங்கியது.

தபால் வாக்குப்பதிவளித்த தேர்தல் பணியாளர்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆயிரத்து 924 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மாவட்டம் முழுவதும் ஐந்தாயிரத்து 884 ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் அனைவரும் அஞ்சல் வாக்களிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்குப்பதிவு தொடக்கம்
முன்னதாக அஞ்சல் வாக்குப்பதிவு விண்ணப்பங்களில் அலுவலர்கள் தங்கள் விவரங்களைப் பூர்த்திசெய்து வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர்.
பின்னர் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியில் அலுவலர்கள் தங்களது அஞ்சல் வாக்கினை அளித்து விட்டுச்சென்றனர். இதற்கு அடுத்த கட்டமாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வரும் 31ஆம் தேதிமுதல், வீட்டுக்கே சென்று அஞ்சல் வாக்குப்பதிவு பெறப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.