ETV Bharat / state

'பண்டிகையை கொண்டாடுங்கடே' - நெல்லையில் கழுதைப் பொங்கல்!

அதிக விலை மதிப்புள்ள பாலை தருவதாலும், அழிந்து வரும் கழுதை உயிரினத்தைக் காப்பாற்றும் நோக்கிலும் நெல்லையில் கழுதைப்பால் பண்ணை நடத்தி வரும் 4 இளைஞர்கள் கழுதைப் பொங்கல் கொண்டாடினர்.

கழுதையை போற்றும் வகையில் நெல்லையில் கொண்டாடப்பட்ட கழுதை பொங்கல்

author img

By

Published : Jan 17, 2023, 5:23 PM IST

கழுதையைப் போற்றும் வகையில் நெல்லையில் கொண்டாடப்பட்ட கழுதைப் பொங்கல்

திருநெல்வேலி: முக்கூடல் அருகே துலுக்கப்பட்டி கிராமத்தில் பாபு என்பவர், தனது நண்பர்களான கிரி, சௌந்தர் உள்ளிட்ட நான்கு பேருடன் இணைந்து தமிழ்நாட்டில் முதல்முறையாக அமைத்த கழுதை பண்ணையை சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

கழுதைப் பால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுப்பதால் பல மருத்துவ குணங்கள் இருப்பதாக முன்னோர்கள் காலத்தில் இருந்து நம்பப்பட்டு வருகிறது.

சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிராமங்களில் கழுதைகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த நாகரிக காலத்தில் கழுதைகள் வளர்ப்பு வெகுவாக குறைந்ததுள்ளது. அதே சமயம் முகச்சாயம் க்ரீம்கள் உள்ளிட்ட அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பில் கழுதைப்பால் முக்கியப் பங்கு வகிப்பதால், கழுதைப் பாலுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் கழுதைப்பால் 7000 ரூபாய் வரை விற்கப்படுவதாக பாபு மற்றும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

எனவே, கழுதைப் பால் மூலம் மாதம் 30 லட்சம் ரூபாய் வரை, பாபு மற்றும் அவரது நண்பர்கள் சம்பாதிக்கின்றனர். மேலும் அவர்கள் சொந்தமாக பெங்களூருவில் அழகு சாதனப்பொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருவதால், நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள கழுதைப் பண்ணை மூலம் பாலை எடுத்து, அவற்றை பெங்களூரு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் முதல் முறையாக கழுதைகளுக்கு பொங்கல் விழா நடத்தி பாபு மற்றும் அவரது நண்பர்கள் அசத்தியுள்ளனர். நேற்று மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு மாடுகளைப் போன்று கழுதைகளும் மதிப்புமிக்க உயிரினம் என்பதை சமூகத்திற்கு எடுத்துரைக்கும் வகையிலும், அதிக விலை மதிப்புள்ள பாலை தருவதாலும் 'கழுதைப் பொங்கல்' கொண்டாடுவதாக பாபு மற்றும் அந்த நபர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக மாட்டுப் பொங்கல் போன்று கழுதைப் பொங்கலை கொண்டாட வேண்டும் என்று பண்ணையில் கழுதைகளுக்கு மாலை, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரித்தனர். பின்னர் பண்ணையில் பொங்கல் வைத்து வழிபட்டு அனைவரும் உற்சாகமுடன் கழுதையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

அழிந்து வரும் கழுதை உயிரினத்தை காப்பாற்றும் வகையில் பாபு மற்றும் அவரது நண்பர்கள் முன்னெடுத்துள்ள இச்செயல் சமூக ஆர்வலர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் கோயில் பூசாரி கொலை - 5 பேரிடம் போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.