ETV Bharat / state

உதயநிதி மீட்... கட்டுக்கட்டாக பணம்... கைமாற்றிவிட்ட போலீஸ்.. ஏன் இப்படி? - கன்னியாகுமரி

நெல்லை உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியில் கையில் கட்டுக்கட்டாக பணத்தை வாங்கி திமுக பிரமுகர்களுக்கு விநியோகம் செய்த காவல்துறை அதிகாரி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது.

போலீஸ் வாகனத்தில் இருந்து கட்டு கட்டாக பணத்தை எடுத்து திமுக பிரமுகரிடம் வழங்கிய போலீஸ் அதிகாரி

author img

By

Published : Nov 23, 2022, 3:10 PM IST

Updated : Nov 23, 2022, 3:45 PM IST

திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கட்சி நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக தூத்துக்குடியில் இருந்து நெல்லை வழியாக நேற்று(நவ.22) கன்னியாகுமரி சென்றார். முன்னதாக கேடிசி நகர் மேம்பாலம் அருகே நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்த நிலையில் கேடிசி நகரில் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பின்போது அவரது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர், கையில் கட்டுக்கட்டாக பணத்தை கட்சிக்காரரிடம் கொடுத்தது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முக்கியப்பிரமுகர்களை சாலையில் பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் விஐபி எஸ்கார்ட் வாகனத்தில் செல்லும் அந்த காவல்துறை அலுவலர், காவல் துறை வாகனத்தில் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டுகளை வாங்கி தனக்குப் பின்னால் வந்த காரில் இருந்த திமுக நிர்வாகியிடம் 'இரண்டு இருக்கு(2 லட்சம்)' என்று கூறியபடி வேகம் வேகமாக கொடுக்கிறார். இந்தக் காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தப் பணம் தன்னை வரவேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்து நெல்லை நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டதா? அல்லது வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழைத்துவரப்பட்ட தொண்டர்களுக்கு செலவு செய்ய மாவட்ட திமுக நிர்வாகிகள் வழங்கிய பணமா என்பது தெரியவில்லை. பட்டப்பகலில் காக்கி சட்டை அணிந்த காவல்துறை அதிகாரி அரசியல் பிரமுகர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை வாங்கி, நடுரோட்டில் விநியோகம் செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து திமுக பிரமுகரிடம் வழங்கிய போலீஸ்: வெடித்த சர்ச்சை

இதற்கிடையில் இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக அந்தப் பணம் யாரிடமிருந்து பெறப்பட்டது. எதற்காக இந்தப் பணத்தை காவலர் வாங்கிக்கொடுத்தார் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்

Last Updated : Nov 23, 2022, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.