தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3,437 ஆண்களுக்கும் 2,622 பெண்களுக்கும் உடல்தகுதி தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடல்தகுதி தேர்வு இன்று (ஜூலை.26) ஆரம்பமானது.
உடல்தகுதி தேர்வில் கலந்துகொள்ள வரும் தேர்வாளர்கள் அரசு அறிவித்திருக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 500 பேர் வீதம் இந்தத் தகுதி தேர்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆண் தேர்வாளர்களுக்கு உடல்தகுதி தேர்வு ஆயுதப்படை மைதானத்திலும் பெண் தேர்வாளர்களுக்கான தேர்வு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்திலும் நடைபெறுகிறது.
இந்த தகுதி தேர்விற்கு வரும் தேர்வாளர்கள் கட்டாயம் கரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அழைப்பாணை அனுப்பப்பட்டவர்களுக்கு முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் அதனைத் தொடர்ந்து உடல் அளவீடுகள் எடுக்கும் பணியும் 1,200 மீட்டர் ஓட்டமும் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 'லேட்டா வந்தாலும் கெத்துதான்' 24 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தைப் பெற்ற காவலர்கள்