திருநெல்வேலி: நெல்லை மாநகர காவல் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்த குமரேசன், பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கியிருந்து தினமும் பணிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை (ஜூலை 26) தான் தங்கியிருந்த குடியிருப்பு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிலர், காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி பெருமாள்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட காவலர் குமரேசனின் உடலை மீட்டு உடற்கூராய்விறகாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் குமரேசன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே அவருக்கு பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டுதா அல்லது குடும்பச் சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்ட விரோத மது விற்பனை - 3 பேர் கைது