ETV Bharat / state

அடிக்குறாங்க, அடிக்குறாங்க; நெல்லையில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி! - பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை

திருநெல்வேலி காவல்துறையின் சோதனைக்குப் பயந்து வாகனத்தைத் திருப்பிய இளைஞர் மீது லாரி மோதியதில் இளைஞர் பலியானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி

author img

By

Published : Jun 26, 2023, 9:20 AM IST

நெல்லையில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி

திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு அருகே சிந்துபூந்துறையைச் சேர்ந்தவர், செந்தில் முருகன். இவர் இஎஸ்ஐ அலுவலகத்தில் லிஃப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் பணி முடித்து வெளியே சென்று விட்டு வீட்டுக்கு நேற்றிரவு திரும்பிக் கொண்டு இருந்தார். அவர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காவல் துறையினர் உடையாபட்டி சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

ஹெல்மெட் அணியாமல் வந்த செந்தில் முருகன் காவல் துறையைக் கண்டதும் திடீரென அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வந்த வழியே திருப்பி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உடற்கூராய்விற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

காவல் துறையின் சோதனை காரணமாகவே லிஃப்ட் ஆபரேட்டர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் பழைய மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் காவல் துறைக்கும், உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் கூறி உள்ளனர்.

இதையும் படிங்க: ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி: சதி வேலையா? போலீசார் விசாரணை..

ஆனால், லிஃப்ட் ஆபரேட்டரின் உறவினர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையில் கலைந்து போகமாட்டோம் என்றும், இறந்தவரின் உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறி உள்ளனர். போலீஸ் மற்றும் உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதன் பின்னரே இறந்தவரின் உறவினர்கள் கலைந்து சென்று உள்ளனர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. மேலும், ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

ஏற்கனவே போலீசார் வாகன சோதனையால் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இது போன்று பலர் தங்கள் இன்னுயிரை மாய்த்து வரும் நிலையில் நெல்லையில் போலீசாரின் வாகன சோதனைக்குப் பயந்து அவசர கதியில் வாகனத்தை திருப்பியபோது, இளைஞர் உயிரிழந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை இரக்கமின்றி போலீசார் தாக்கிய சம்பவம் மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Trichy Accident: திருச்சியில் பேருந்து - கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.