திருநெல்வேலி: மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (55). இவர் அப்பகுதியில் உள்ள பழமையான நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோயிலில் பராமரிப்பு பணி செய்து வருகிறார். இன்றைய தினம் காலை வழக்கமான பணிகளை முடித்துவிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட வீட்டிற்குச் சென்றார்.
பின்னர், அவர் மீண்டும் திரும்பி வந்தபோது கோயில் வளாகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பலர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட அவருக்கும், மது அருந்தி கொண்டிருந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகளைப்பாக மாறியது.
பின்னர் கிருஷ்ணனை அவர்கள் அறிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணனை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை பிடித்து காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடி - சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீஸ்