ETV Bharat / state

ரூ.60 லட்சம் எங்கே...? - நிவாரணத் தொகையை கண்டுபிடித்து தரக்கோரி விவசாயிகள் மனு - Farmers Grievance Meeting

நெல்லை: தங்களுக்கு வழங்கப்படவேண்டிய மாயமான 60 லட்சம் ரூபாயை கண்டுபிடித்து தருமாறு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நெல்லை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

நிவாரணத்தொகையை கண்டுபிடித்து தர கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு
author img

By

Published : Sep 21, 2019, 7:48 AM IST

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் தாலுகா பகுதியில் அதிகளவில் கடந்த ஆண்டு மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. பயிர் நன்கு வளர்ந்து கதிர் பிடித்திருந்த நிலையில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலுக்கு உள்பட்டு பயிர் முற்றிலும் சேதம் அடைந்து விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளானார்கள்.

இதனையடுத்து இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து படைப்புழு தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக கிணற்று பாசன வசதி உள்ள நிலத்திற்கு ஏக்கருக்கு 5,300 ரூபாயும் மானாவாரி நிலத்திற்கு ஏக்கருக்கு 3,000 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

நிவாரணத்தொகையை கண்டுபிடித்து தரக்கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

இந்நிலையில், திருவேங்கடம் தாலுகா மலையன்குளம், செவல்குளம் பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1300 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "இரண்டு பகுதிகளிலும் கிணற்று பாசன வசதி கொண்ட நிலங்களே உள்ளது. ஆனால் எங்கள் பகுதியில் உள்ள நிலங்களை வேளாண் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தவறாக மானவாரி நிலமாக கணக்கிட்டதோடு மட்டுமல்லாமல் மானவாரி நிலத்திற்கு வழங்க வேண்டிய தொகை மூன்றாயிரம் ரூபாயை வழங்காமல் 60 விழுக்காடுதான் பாதிப்பு உள்ளது எனக் கூறி வெறும் 1300 ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளனர்.

முறையாக கணக்கிட்டிருந்தால் 5,300 ரூபாய் வழங்கியிருக்க வேண்டும். அதில் மானவாரி என கணக்குக்காட்டி அரசு அறிவித்த தொகையும் வழங்காமல் ஏமாற்றப்பட்டுள்ளோம். இதனால் பாதிப்பிற்குள்ளான நான்காயிரம் ஏக்கர விவசாய நிலத்திற்கு வரவேண்டிய 60 லட்சம் ரூபாய் எங்கு மாயமானது என்று தெரியவில்லை.

இந்தத் தொகையை பெற்றுத் தரக்கோரி ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ளோம். கடந்த 17ஆம் தேதி திருவேங்கடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். இன்று (செப்டம்பர் 20) நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் மனு அளித்துள்ளோம்" என வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க:

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை'

Intro:விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய 60 லட்சம் ரூபாய் எங்கு மாயமானது என்பது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த தொகையை கண்டுபிடித்து தருமாறு  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் .Body:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட மலையன்குளம் , செவல்குளம் பகுதியில் படைப்புழு தாக்குதலுக்கு உட்பட்ட மக்காசோளப்பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தொகை முறையாக வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய 60 லட்சம் ரூபாய் எங்கு மாயமானது என்பது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த தொகையை கண்டுபிடித்து தருமாறு  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் .

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் தாலுகா பகுதியில் அதிக அளவில் கடந்த ஆண்டு மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. பயிர் நன்கு வளர்ந்து கதிர் பிடித்திருந்த நிலையில்  அமெரிக்கன் படைப்புழு தாக்குதலுக்கு உட்பட்டு பயிர் முற்றிலும் சேதம் அடைந்து விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளானார்கள் . இதனையடுத்து இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர் . இதனையடுத்து படைப்புழு தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக கிணற்று பாசனவசதி உள்ள நிலத்திற்கு ஏக்கருக்கு 5.300 ரூபாயும் , மானவாரி நிலத்திற்கு ஏக்கருக்கு 3000 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த தொகை வழங்கப்பட்ட நிலையில் திருவேங்கடம் தாலுகா மலையன்குளம் , செவல்குளம் பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1300 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில் இரண்டு பகுதிகளிலும் கிணற்று பாசன வசதி கொண்ட நிலங்களே உள்ளது. ஆனால் எங்கள் பகுதியில் உள்ள நிலங்களை வேளாண்துறை அதிகாரிகள் , கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தவறாக மானவாரி நிலமாக கணக்கிட்டதோடு மட்டும் அல்லாமல்  மானவாரி நிலத்திற்கு வழங்க வேண்டிய தொகை 3 ஆயிரம் ரூபாயை வழங்காமல் 60 சதவீதம்தான் பாதிப்பு உள்ளது என கூறி வெறும் 1300 ரூபாய் மட்டும் வழங்கி உள்ளனர் . முறையாக கணக்கிட்டிருந்தால் 5300 ரூபாய் வழங்கி இருக்க வேண்டும் , அதில் மானவாரி என கணக்குகாட்டி அரசு அறிவித்த தொகையும் வழங்காமல் ஏமாற்றப்பட்டுள்ளோம் இதனால் பாதிப்பிற்குள்ளான 4 ஆயிரம் ஏக்கர விவசாய நிலத்திற்கு வரவேண்டிய 60 லட்சம் ரூபாய் எங்கு மாயமானது என்று தெரியவில்லை. இந்த தொகையை பெற்றுத்தரக் கோரி ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ளோம் கடந்த 17-ந்தேதி திருவேங்கடத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் , இன்று நடந்த விவசாயிகன் குறை தீர்க்கும் கூட்டத்திலும் மனு அளித்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.