நெல்லை: நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று(ஏப்.2) மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்து கன மழை பெய்தது. வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: கள்ளழகர் இருப்பிடத்தை ஜிபிஎஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் - இணை ஆணையர் அனிதா