இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் தினசரி காய்கறி சந்தைகள் முடக்கப்பட்டு மாநகராட்சி பூங்காக்களில் சமுக இடைவெளியிட்டு இயங்கிவருகிறது. அத்தியாவசியமான பால், மருந்துகள் தங்குதடையின்றி கிடைத்து வருவதால் அதனை வாங்கும் பொருட்டு மக்கள் ஒரே நேரத்தில் பணம் எடுப்பதற்காக ஏ.டி. எம் மையங்களில் நீண்ட வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு பகுதிக்கும் நடமாடும் ஏ.டி. எம் சென்று வருவதை அடுத்து மக்களின் சிரமம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபர் பயன்படுத்த செல்வதற்கு முன் கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசரும் வழங்கப்படுகிறது. இச்சேவை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க... ஆதரவற்றவர்களுக்கு முடித்திருத்தம் செய்யும் காவலர்கள்