ETV Bharat / state

ஸ்ரீ அழகிய நம்பிராயா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோஸ்தவ கொடியேற்றம்! - பங்குனி பிரம்மோஸ்தவ கொடியேற்றம்

திருநெல்வேலி: திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோஸ்தவ கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்றனர்.

பங்குனி பிரம்மோஸ்தவ கொடியேற்றம்
பங்குனி பிரம்மோஸ்தவ கொடியேற்றம்
author img

By

Published : Mar 27, 2021, 10:20 PM IST

108 வைணவத் திருத்தலங்களில் பாண்டிய நாட்டுத் திருப்பதிகளில் திருக்குறுங்குடி ஒன்றாகும். இங்கு மூலவா் நம்பி என்ற திருநாமத்துடன் - நின்ற நம்பி, இருந்த நம்பி. கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி. மலைநம்பி என ஐந்து நிலைகளில் அருள்பாலித்துவருகின்றாா்.

தாயாா் குறுங்குடிநாயகி. இங்குள்ள நம்பியே நம்மாழ்வாராக அவதரித்ததாக வரலாறு. இத்திருத்தலத்தில்தான் ஆழ்வாா்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாா் முக்திப் பெற்றாா். சுவாமி ராமானுஜருக்கு நம்பிபெருமாள் திருமண் காப்பு இட்ட திருவட்டப்பாறை அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த திவ்ய தேசத்தில் பங்குனி பிரம்மோஸ்தவம் திருக்குறுங்குடி பேரருளாளாள இராமானுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிகத்துடன் சிறப்பாகத் தொடங்கியது.

இதையொட்டி நேற்று மாலையில் ஜீயா் சுவாமிகளின் நியமனம் பெற்றுக் கொண்டு தேங்காய் சாற்றுதல், ம்ருத்ஸங்கரணம், திருமுறைசாற்று போன்றவைகள் நடைபெற்றுன. இன்று காலையில் யாகசாலை விஷ்வக்ஷேன ஆராதனையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

புண்யாவாசனம், ஹோமங்கள் ஜீயா் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. சுமாா் 52 அடி உயர தங்க கொடிமரத்தில் காலை 6.30-7.30க்குள் மீன லக்னத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேக வழிபாடுகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

11 நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் தினமும் காலை பெருமாள் புறப்பாடு மற்றம் உபயதார் திருமஞ்சனம் மாலையில் பல்வேறு வாகனங்களில் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரபாிபூா்ண நம்பி புறப்பாடு நடைபெற்றது.

ஐந்தாம் திருநாள் ஐந்து கருட சேவை, 10ஆம் திருநாள் தோ்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். விழா ஏற்பாடுகளை திருக்குறங்குடி ஜீயா் மடத்தினா், அழகிய நம்பிராயா் தேவஸ்தானம் செய்திருந்தனா்.

இதையும் படிங்க: ’பதவி வெறிக்காக தமிழகத்தை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.