ETV Bharat / state

நகராட்சிகளில் 45 ஆண்டுகளாக மாற்றப்படாத பணி அனுமதி ஆணையால் காலி இடங்களை நிரப்புவதில் சிக்கல்! - நகராட்சி ஊழியர்கள்

நகராட்சிகளில் கடந்த 45 ஆண்டுகளாக மாற்றப்படாத பணி அனுமதி ஆணையால் காலி இடங்களை நிரப்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஊழியர்களுக்கு கடுமையான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

municipality
municipality
author img

By

Published : Mar 1, 2021, 12:21 PM IST

மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்திற்காக உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மாநகர் பகுதிகளில் மாநகராட்சியும் நகர் பகுதியில் நகராட்சியும் ஊரகப் பகுதிகளில் பேரூராட்சிகள், ஊராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகள் இயங்கிவருகின்றன.

நகராட்சிகளில் கட்டட வரைபட அனுமதி, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பிறப்பு பதிவு, பிறப்பு சான்று, இறப்பு பதிவு, இறப்பு சான்று போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

சீதாராமன், நகராட்சி ஊழியர்கள் சங்க நிர்வாகி

ஆனால் கடந்த 45 ஆண்டுகளாக நகராட்சிகளில் பணி அனுமதி ஆணை மாற்றப்படாமல் இருப்பதால் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அதாவது 1970 மற்றும் 1976ஆம் ஆண்டு நகராட்சிகளுக்கு பணி அனுமதி தொடர்பான ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையிலேயே தற்போது வரை காலி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த 45 ஆண்டுகளில் நகராட்சிகளில் வேலைப்பளு அதிகரித்திருப்பதால் அதற்கு ஏற்ப கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் பணி அனுமதி அணையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது வரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நகராட்சிகளில் பல ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. குறிப்பாக ஒரு நகராட்சியில் ஆணையர் மற்றும் அவருக்கு கீழ் உயர் அலுவலர்கள், அலுவலர்கள் என சுமார் 500 பேர் வரை பணிபுரிய வேண்டும். ஆனால் தற்போது 200க்கும் குறைவானவர்களே நகராட்சிகளில் பணிபுரிந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் 20% அதாவது சுமார் 15 ஆயிரம் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் நகராட்சிகளில் பொது மக்களுக்கான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.