ETV Bharat / state

நெல்லையில் வடகிழக்குப் பருவமழை போலி ஒத்திகைப் பயிற்சி!

நெல்லை: வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அதற்கான போலி ஒத்திகைப் பயிற்சியானது தாமிரபரணி ஆற்றில் நடைபெற்றது.

ஒத்திகை நிகழ்ச்சி
ஒத்திகை நிகழ்ச்சி
author img

By

Published : Sep 15, 2020, 3:35 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. இதனால் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் தீயணைப்புத் துறை, வருவாய்த் துறையினர் இணைந்து வெள்ள மீட்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

அதன்படி நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றில் இன்று (செப். 15) மாவட்ட தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் இணைந்து வடகிழக்குப் பருவமழை போலி ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமை தாங்கினர். மேலும் நிலைய அலுவலர்கள் வீரராஜ் முருகானந்தம், பாளையங்கோட்டை வட்டாட்சியர் சாஸ்திரியன், 20 கமாண்டோ வீரர்கள், 30-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் மகாலிங்கம் மூர்த்தி

பருவமழை நேரத்தில் வெள்ளம் ஏற்படுவதால் ஆற்றில் அளவுக்கதிகமான நீர் வரும். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள் வெள்ளத்தில் மூழ்கினால் அவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாகச் செய்துகாட்டினர்.

குறிப்பாக நீச்சல் தெரிந்த மற்றும் தெரியாத நபர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படும்போது அவர்களைக் கண்டறிந்து உடனடியாக ரப்பர் படகுகள் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்துசென்று மீட்டு, கரைப் பகுதியில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துமனைக்கு அனுப்பிவைப்பது போன்ற ஒத்திகை நிகழ்சியையும் செய்துகாட்டினர்.

மேலும் ஆழம் குறைவான பகுதியில் ஆற்றின் இரு கரைகளிலும் கயிறு கட்டி அதன்மூலம் லைப் ஜாக்கெட்டுடன் சென்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் நபர்களை மீட்டு கரைக்கு கொண்டுவருவது போலவும் செய்துகாட்டினர்.

குறிப்பாக மீட்புப் படை வீரர்கள் வருவதற்கு தாமதமாகும் பட்சத்தில் பொதுமக்கள் தங்கள் கையில் கிடைக்கும் பொருள்களை வைத்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் தீயணைப்புத் துறையினர் செய்துகாட்டினர். அதுபோல வாட்டர் கேன், பிளாஸ்டிக் குடம், சிலிண்டர் மற்றும் தெர்மாகோல் ஆகியவற்றைக் கொண்டு வெள்ளத்தில் நீந்திவருவது குறித்து செய்துகாட்டப்பட்டது.

இது குறித்து, தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் மகாலிங்கம் மூர்த்தி கூறுகையில், ”வடகிழக்குப் பருவமழையின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை இணைந்து இன்று (செப்.15) நெல்லை தாமிரபரணி ஆற்றில் 30 கமாண்டோ வீரர்கள், இருபதுக்கும் மேற்பட்ட சிறந்த நீச்சல் வீரர்களைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டோம்.

தமிழ்நாடு தீயணைப்புத் துறை, மீட்புப்பணிகள் உத்தரவின்படி நீச்சல் வீரர்களுக்கு மேலும் பயிற்சி அளிக்கும் வகையிலும் இந்த ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அவசர காலத்தில் எவ்வாறு தங்களை மீட்டுக் கொள்வது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு பருவமழையில் 10-க்கும் மேற்பட்ட மீட்புப் பணிகளை மேற்கொண்டோம். பருவமழை இல்லாத சமயத்தில்கூட பொதுமக்கள் ஆற்றில் குளிக்கும்போது வாட்டர் கேன், தெர்மாகோல் உள்ளிட்ட தங்கள் கையில் கிடைக்கும் பொருள்களை வைத்து தங்களைத் தாங்களே மீட்டுக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில்தான் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேட்டூர் அணையின் நீர்திறப்பு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.