திருநெல்வேலி கிருபா நகரைச் சேர்ந்தவர் ஐசக். இவர் தனக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முடிவெடுத்து அதற்கான அறிவிப்பு ஒன்றை தனது வீட்டில் வெளியில் வைத்துள்ளார்.
அந்த அறிவிப்பில் வீடு வாடகைக்கு விடப்படும் என்ற அறிவிப்புடன் “வட மாநிலத்தவர்கள், குடிகாரர்கள், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினர் வாடகைக்கு வீட்டை அணுக வேண்டாம்” என்ற தகவலுடன் அறிவிப்புப் பலகை வைத்துள்ளார். அவரின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இது குறித்து ஐசக் கூறுகையில், 'வடமாநிலத்தவரின் ஊடுருவலை குறைக்கவும், தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் இந்த அறிவிப்பு வைத்துள்ளேன்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் வடமாநிலத்தவர்களுக்கு அதிகளவில் பணி செய்வதற்கான வாய்ப்பினை அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்திக் கொடுத்ததால் அவர் அணியினரும் வாடகைக்கு வீட்டை அணுக வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம்?