ETV Bharat / state

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் - திரளான மக்கள் தரிசனம் - மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்

லண்டனில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இரும்பு அச்சு மூலம் ஓடும் நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம்!
நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம்!
author img

By

Published : Jul 2, 2023, 11:17 AM IST

Updated : Jul 2, 2023, 12:46 PM IST

லண்டனில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இரும்பு அச்சு மூலம் ஓடும் நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழா கோலாகலமாக தொடங்கியது

திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில். சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய கோயில்களில் நெல்லையப்பர் கோயில் கோயிலும் ஒன்று. இது திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகவும் விளங்குகிறது.

இந்த ஆண்டு ஆனி திருவிழா கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் காலை மற்றும் மாலை சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்வு நடைபெற்றன. இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று ஆனி தேரோட்டம் நடைபெறுகிறது. அதை ஒட்டி அதிகாலை 4 மணிக்கு சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

சிறப்பம்சங்கள்: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரானது, தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேராகும். 450 டன் எடை உடன் 70 அடி உயரத்தில் இருக்கும் இந்த தேர் லண்டனில் தயாரிக்கப்பட்ட இரும்பு அச்சு மூலம் இயங்குகிறது. இக்கோயிலில் சுவாமி நெல்லையப்பர் தேர், காந்திமதி அம்மன் தேர், விநாயகர் தேர், முருகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என 5 தேர்களும் ஒரே நாளில் இழுக்கப்படுகின்றன.

இந்த தேரோட்ட விழா சுமார் 517 ஆண்டுகளாக பாரம்பரியமாக நீடித்து வருகிறது. சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. வருடத்தின் 12 மாதங்களும் இக்கோயிலில் திருவிழா நடைபெறும். இருப்பினும் ஆனி மாதம் நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

இன்றைய நிகழ்வில் முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுப்ரமணியர் தேர், சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை இழுக்கப்பட்டன. எந்த விதமான இயந்திரங்கள் துணையோடு இல்லாமல், மக்களாலேயே இந்த தேரோட்டம் பிடித்து இழுத்து நிலையத்திற்கு கொண்டு வரப்படும் என்பது மற்றொரு சிறப்பாகும்.

தேரோட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கோயிலின் உட்புறம் நான்கு ரத வீதிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உயர் கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

தேரோட்டத்தை முன்னிட்டு இன்று ரத வீதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிற நிலையில், திருநெல்வேலி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தேரோட்டத்தில் மதுரையைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் வித்தியாசமான முறையில் ஹெல்மெட்டில் மாட்டின் கொம்பு மற்றும் காதுகளை வடிவமைத்து, அதை தலையில் அணிந்தபடி வந்திருந்தார். இந்த வித்தியாசமான ஹெல்மெட்டை அணிந்து கொண்டு சரவணகுமார் உற்சாகம் மிகுதியோடு சிவ வாத்தியங்கள் முழங்க ரத வீதிகளில் மாட்டைப் போன்று தலையை அசைத்துக் கொண்டு நடனம் ஆடினார்.

தேரோட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் சரவணகுமாரின் ஹெல்மட்டை ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும், சிவன் மீது உள்ள அதீத ஆசை காரணமாக இந்த பிரத்யேக ஹெல்மேட் தயாரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆனி மாத பிரதோஷம்: அண்ணாமலையார் கோயில் நத்திக்கு சிறப்பு அபிஷேகம்

Last Updated : Jul 2, 2023, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.