ETV Bharat / state

17 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட நெல்லையப்பர் கோயில் வாசல்கள் திறப்பு!

திருநெல்வேலி: 2004ஆம் ஆண்டு மூடப்பட்ட நெல்லையப்பர் கோயிலின் மூன்று வாசல் கதவுகள் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை.11) சிறப்பு பூஜையுடன் திறக்கப்பட்டன.

Nellaiappar temple doors open
நெல்லையப்பர் கோயில் வாசல் திறப்பு
author img

By

Published : Jul 11, 2021, 6:02 PM IST

நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பிற சிவன் கோயில்களைப் போன்றே நெல்லையப்பர் கோயிலிலும் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என நான்கு திசைகளிலும் நான்கு வாசல்கள் உண்டு.

முன்னதாக, 2004ஆம் ஆண்டு நெல்லையப்பர் கோயில் வடக்கு புறவாசல் அருகே ஒரு கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியது. அன்றிலிருந்து பாதுகாப்பு கருதி கோயிலின் வடக்கு, தெற்கு, மேற்கு புற வாசல்கள் மூடப்பட்டன. முக்கியத் திருவிழா நேரங்களில் மட்டும் இந்த மூன்று கதவுகளும் திறக்கப்படும்.

கொண்டாட்டங்கள் நிறைவடைந்ததும், மீண்டும் கதவுகள் மூடப்படும். இவ்வாறு 17 ஆண்டுகளாக மூன்று வாசல் கதவுகளும் பூட்டியே கிடந்தன. அண்மையில் அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு நெல்லையப்பர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லையப்பர் கோயில் வாசல் திறப்பு
நெல்லையப்பர் கோயில் வாசல் திறப்பு

வாசல்கள் திறப்பு

அப்போது பூட்டிக் கிடக்கும் வாசல்கள் விரைவில் திறக்கப்படும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து, சொன்னதோடு மட்டுமின்றி, உடனடியாக கோயில் வாசல்களைத் திறக்க கோயில் நிர்வாகத்திற்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

பாதுகாப்பு போடுவது தொடர்பாக மாநகரக் காவல் துறையிடம் அனுமதி வாங்குவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் மாநகரக் காவல் ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டது. காவல் துறையின் உத்தரவு கிடைக்கப் பெற்றதையடுத்து இன்று (ஜூலை.11) நெல்லையப்பர் கோவில் வடக்கு, தெற்கு, மேற்கு வாசல் கதவுகள் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயில் வாசல்கள் திறப்பு

பக்தர்கள் மகிழ்ச்சி

17 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் கதவுகள் திறக்கப்பட்டதால் அதைக் காண பக்தர்கள் கோயில் முன் திரண்டனர். வாசல் திறப்பை ஒட்டி கோயில் யானை வரவழைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, தீபம் காட்டப்பட்டு மூன்று வாசல் கதவுகளும் திறக்கப்பட்டன.

நெல்லையப்பர் கோயில் வாசல்
நெல்லையப்பர் கோயில் வாசல்

தற்போது திறக்கப்பட்ட மூன்று வாசல்களிலும் கோயில் பாதுகாப்பு ஊழியர்கள், காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு சிவகளை ஒரு முக்கிய அடையாளம் - அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.