ETV Bharat / state

காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை; நெல்லையில் வெறிச்செயல்! - நெல்லையில் இளைஞர் வெறிச்செயல்

Nellai Women Murder: நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோரில் பணி செய்த இளம்பெண் கடையில் வைத்து சிறார் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலை ஏற்க மறுத்த இளம் பெண் பட்டப்பகலில் கழுத்தறுத்து கொலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 7:05 PM IST

Updated : Oct 3, 2023, 12:21 PM IST

நெல்லை: நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மூன்றாவது மகள் சந்தியா(18). இவர் நெல்லை டவுன் கீழ ரத வீதியில் உள்ள ராஜம் டாய்ஸ் அண்ட் ஃபேன்சி என்ற கடையில் பணி செய்து வந்துள்ளார். அப்போது, கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை, காந்திமதி அம்மன் கோவில் அருகே அமைந்திருக்கும் குடோனில் இருந்து எடுத்து வருவதற்காக சந்தியா குடோனுக்கு சென்றுள்ளார்.

வெகுநேரம் ஆகியும் சந்தியா கடைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உடன் பணி செய்யும் நபர்கள், குடோனுக்கு சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் சந்தியா கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, நெல்லை டவுன் போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, காவல் உதவி ஆணையாளர் சுப்பையா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சந்தியாவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிக வணிக நிறுவனங்களும், ஆள் நடமாட்டமும் உள்ள அப்பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் காரணமாக, கீழ ரத வீதி பகுதியில் பெரும் பரபரப்பும், போக்குவரத்து நெருக்கடியும் நிலவியது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக, அக்கடையில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் உயிரிழந்த சந்தியாவின் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சரவணகுமார் ஆய்வு நடத்தி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொள்ளவும், குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்தும் உத்தரவிட்டுள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அதாவது நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவர், டவுனில் உள்ள தற்போது கொலை செய்யப்பட்ட சந்தியா வேலை பார்த்து வந்த கடையின் பக்கத்து கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, சந்தியாவுடன் சிறுவன் நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், சந்தியாவை காதலித்த அச்சிறுவன் தனது விருப்பத்தை சந்தியாவிடம் கூறியுள்ளார். முதலில் காதலை ஒப்புக்கொண்ட சந்தியா, நாளடைவில் காதலை மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் தன்னை காதலிக்கும்படி சிறுவன் தொடர்ச்சியாக சந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால், திட்டவட்டமாக சிறுவனை சந்தியா வெறுத்துள்ளார்.

எனவே அச்சிறுவன், தனக்கு கிடைக்காத சந்தியா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று எண்ணி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டபடி, இன்று (ஆக்.2) சந்தியா குடோனுக்கு சென்றதை நோட்டமிட்ட சிறுவன், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியுடன் சென்று சந்தியாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து அவர் தப்பி ஓடியதாக தெரிகிறது. இதனால் போலீசார் அச்சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில், அதிக ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொம்புத்துறையா..? கடையக்குடியா..?.. திருச்செந்தூர் அருகே நூதன பிரச்சனை.. அரசு தலையிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Last Updated : Oct 3, 2023, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.