ETV Bharat / state

திசையன்விளை மாணவி தற்கொலை! - நெல்லையில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திசையன்விளையில் 14 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லையில் பரிதாபம் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

author img

By

Published : May 10, 2022, 4:45 PM IST

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை லட்சுமி நகரைச் சேர்ந்த 14 வயது மாணவி திசையன்விளை உடன்குடி ரோட்டில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா தபோவனம் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

மாணவி தேர்வு எழுதும்போது அறையின் பொறுப்பு ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் மாணவர்கள் மத்தியில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியர் திட்டியதால் தான் அவமானப்பட்டதை தனது தாயிடம் சொல்லி அழுது "இனிமேல் பள்ளிக்கு போகமாட்டேன்" எனக் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில், மாணவியின் தாய் கலா, மாணவியை சமாதானப் படுத்தியதாகவும் தெரிகிறது. மாணவியின் தந்தை வேலைக்கு சென்றுள்ளார். மாணவியின் அண்ணன் டியூசன் சென்றுள்ளார். அப்போது, மாணவியின் தாய் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை எதிர்பார்த்த மனம் உடைந்த மாணவி தனி அறைக்கு சென்று தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. மாணவியின் அண்ணன் சங்கர் டியூசன் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது தனது தங்கை தற்கொலையில் உயிரிழந்துள்ளதை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து திசையன்விளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:பொதுத் தேர்வுக்கு பயந்து மாணவன் தீக்குளித்து தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.