ETV Bharat / state

கரடி தாக்கியவர்களுக்கு ரேபிஸ் பாதிப்பா? மருத்துவர் பிரத்யேக தகவல்.. - மருத்துவமனையில் அனுமதி

தென்காசி அருகே கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த மூன்று பேருக்கு ரேபிஸ் பாதிப்பு இல்லை என நெல்லை மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடையம்
கடையம்
author img

By

Published : Nov 15, 2022, 11:13 AM IST

தென்காசி: கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பை சேர்ந்த மசாலா வியாபாரி வைகுண்டமணி, விவசாயிகள் சைலப்பன், நாகேந்திரன் ஆகியோரை கடந்த 6ஆம் தேதி பெண் கரடி கடித்துக் குதறியது. இதில் சைலப்பன், நாகேந்திரன் இருவருக்கும் முகம் மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர். இருவருக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.

இந்த நிலையில் உயிரிழந்த கரடிக்கு ரேபிஸ் நோய் இருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது. எனவே கரடியை கையாண்ட வனத்துறையினர் மற்றும் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

கரடி தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மூன்று பேருக்கும் ரேபிஸ் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது. இதனிடையே சிகிச்சை பெற்று வரும் நாகேந்திரனுக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் சந்தேகம் அதிகரித்தது.

இந்நிலையில், கரடி தாக்கிய 3 பேரின் சிகிச்சை குறித்து நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் ஈ-டிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அதில் மருத்துவர் கூறியிருப்பதாவது, நாகேந்திரனின் மார்பு பகுதியில் கரடி கொடூரமாக கடித்திருந்த்து. அதனால் அவருக்கு டீயூப் மூலம் சிகிச்சை செய்து வருகிறோம். மேலும் முகத்தில் அதிகளவு அறுவை சிகிச்சை செய்துள்ளதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தற்போது அதுவும் சரி செய்யப்பட்டு உள்ளது. மற்றபடி மூன்று பேருக்கும் ரேபிஸ் இல்லை. முறைப்படி அனுமதிக்கப்பட்ட அன்றே மூவருக்கும் தடுப்பூசி போட்டு விட்டதால் தற்போது நலமுடன் உள்ளனர் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 3 பேரை கடித்த கரடிக்கு ரேபிஸ் பாதிப்பு - தடுப்பூசி போட அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.