ETV Bharat / state

திமுக உள்கட்சி மோதலால் நடந்த படுகொலை... காட்டிக்கொடுத்த ஸ்கார்பியோ! - மேயர் கொலை வழக்கு

நெல்லை: திமுக முன்னாள் மேயர் உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கொடி கட்டிய ஸ்கார்பியோ கார் ஒன்று முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கார்பியோ
author img

By

Published : Jul 29, 2019, 10:51 AM IST

Updated : Jul 29, 2019, 1:57 PM IST

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோரை 23ஆம் தேதி மதியம் அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

இது குறித்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல்வேறு கோணங்களில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அப்பகுதி உணவகம் ஒன்றின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான திமுக கொடிகட்டிய ஸ்கார்பியோ கார் ஒன்று அந்தப் பகுதியை கடந்துசென்றது தெரியவந்தது. மேலும், அந்தக் காரிலிருந்த கைப்பேசி எண்ணிலிருந்து அங்கிருந்த கோபுர சமிக்ஞையில் (Cellphone Tower Signal) அதிக நேரம் பேசியதும் தெரியவந்தது.

சிசிடிவி காட்சி வெளியீடு

இதனை வைத்து விசாரித்ததில், அங்கு நின்றிருந்த காருக்கும் கைப்பேசிக்கும் சொந்தக்காரர் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பதும் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

நெல்லை
திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன்

இதனையடுத்து, காவல் துறையினர் கார்த்திகேயனை பிடித்து பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து விசாரணைநடத்தினர். இதில், தான் குற்றவாளி என கார்த்திகேயன் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், கொலையில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இரு முறை ரூ. 50 லட்சம் வரை பணம் கொடுத்தும் சீட் கிடைக்காத விரக்தியில் இந்தக் கொலை நடைபெற்றிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல் துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Intro:நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
Body:
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன், பணி பெண் மாரியம்மாள் ஆகியோரை கடந்த 23 ம் தேதி மதியம் மர்ம கும்பல் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.
இது குறித்து 3 தனி படைகள் அமைக்கபட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில் முதலில் ஆதாய கொலை என்ற கோணத்திலும் பின்னர் சொத்துபிரச்சனை,அரசியல் ரீதியான கொலை,தேர்தலில் சீட் வாங்கி தருவதில் பணமோசடியால் நடைபெற்ற கொலை என பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஒரு துப்பு கூட கிடைக்காத நிலையில் மதுரையில் உள்ள திமுக பிரமுகர் சீனியம்மாள், உமாமகேஸ்வரியின் அண்ணன் மகன் பிரபு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் காவல்துறைக்கு கொலை வழக்கு தொடர்பாக சிறிய முன்னேற்றம் கூட கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஹோட்டல் சிசிடிவி காட்சியில் சந்தேகத்திற்கிடமான ஸ்கார்பியோ கார் அந்த பகுதியில் நின்றது கண்டறியபட்டது. மேலும் ஒரு செல்போன் நம்பர் அந்த டவரில் அதிக நேரம் பேசியதாக காணபட்டது .கார் மற்றும் செல்போன் நம்பர் இரண்டும் ஒரே நபருக்கு சொந்தமானது என்பதை வைத்து விசாரித்ததில் அவர் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பதும் இவன் மீது பல்வேறு காவல்நிலை யங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து கார்த்திகேயனை காவல்துறையினர் பிடித்து பாளையங்கோட்டை ஆயுத படை மைதானத்தில் விசாரணை நடத்தினர்.இதில் தான் குற்றவாளி என ஒத்து கொண்டதாக கூறப்படுகிறது. கொலையை செய்ய யார் எல்லாம் பயன் படுத்த பட்டார்கள் அவர்கள் யார் என்பது குறித்தும் கார்த்திகேயனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட இரு முறை 50 லட்சம் வரை.பணம் கொடுத்து சீட் கிடைக்காத விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருப்பதாகவே முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது இச்சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப் படையினரை கைது செய்ய காவல்துறையினர் விரைந்துளனர். மேலும் தொடர்புடைய 4 பேரை இரவிலேயே கைது செய்துள்ளாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.Conclusion:
Last Updated : Jul 29, 2019, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.