ETV Bharat / state

துப்பாக்கி சுடும் பயிற்சி- 500 மாணவர்கள் பங்கேற்பு - ncc students

நெல்லை : பாளையங்கோட்டை தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற என்சிசி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சி
author img

By

Published : May 25, 2019, 2:46 PM IST

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் என்சிசி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமில் மாவட்டத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த 20ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி முகாம் வருகின்ற 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி

இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல், வெடி பொருட்களை கையாளுதல், தனி ஒழுக்கப் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியினை என்சிசி கமாண்டர் தினேஷ் வழங்கினார். மேலும் இதில் சிறப்பாக செயல்படும் மாணவ - மாணவிகள் டெல்லியில் நடைபெறும் சிறப்பு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கமாண்டர் தினேஷ் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது இதில் 500 மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
            
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் என்சிசி மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நடைபெற்றது இதில் மாவட்டத்திலுள்ள 50க்கும்  மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கடந்த 20ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது,  இன்று பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியில் வைத்து  நடைபெற்றது இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல்,  வெடி பொருட்களை கையாளுதல், மார்ச் பாஸ்நடைபயிற்சி தனி ஒழுக்கப் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன இந்த பயிற்சியினை என்சிசி கமாண்டர் தினேஷ் வழங்கினார். மேலும் ராணுவ அதிகாரிகள் வெற்றிவேல்,  ராஜேஷ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர் இதில் சிறப்பாக பயிற்சி மேற்கொள்ளும் மாணவ மாணவிகள்  டெல்லியில் நடைபெறும் இது போன்ற சிறப்பு பயிற்சி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கமாண்டர் தினேஷ் தெரிவித்தார் மேலும் இது குறித்து பயிற்சியில் பங்கு கொண்ட மாணவிகள் தெரிவிக்கும் போது தங்களுக்கு இந்த பயிற்சியை உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுப்பதாகவும் தங்களுக்கு இந்த பயிற்சி பயனுள்ளதாக அமைந்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.