ETV Bharat / state

டெபாசிட் தொகைக்காக மது பாட்டில்களை சேகரிக்கும் ‘வேட்பாளர்’! - டெபாசிட் தொகை

நெல்லை: நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான டெபாசிட் பணத்தை செலுத்துவதற்காக குடிமகன்களால் வீசப்பட்ட காலி மது பாட்டில்களை வேட்பாளர் ஒருவர் சேகரித்துவருகிறார்.

nanguneri
author img

By

Published : Sep 25, 2019, 2:46 PM IST

நாங்குநேரி இடைத்தேர்தலில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அதன் தலைவர் செல்லப்பாண்டியன் போட்டியிடவிருக்கிறார். இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 21ஆம் தேதியே தொடங்கிவிட்ட நிலையில், வருகின்ற வெள்ளிக்கிழமையன்று இவர் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

அதற்கான வைப்புத் தொகையை திரட்டுவதற்காக நாங்குநேரி , அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காலி மது பாட்டில்களைச் சேகரித்துவருகிறார். அவ்வாறு சேகரிக்கப்படும் மது பாட்டில்களை பழைய இரும்புக் கடையில் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வேட்புமனுவை தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Nanguneri Election

மேலும், தமிழ்நாட்டில் 65 விழுக்காட்டினர் மது குடிப்போர் இருக்கிறார்கள் என்றும், தங்களால்தான் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது என்று கூறும் செல்லப்பாண்டியன், மதுப் பிரியர்களைப் பாதுகாப்பதும் நாங்குநேரி தொகுதியில் மது ஆலைகளை அமைப்பதும்தான் தனது லட்சியம் என்றும் மார்தட்டிக்கொள்கிறார்.

Intro:நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான டெபாசிட் பணத்தை செலுத்துவதற்காக தொகுதி முழுவதும் குடிமகன்களால் வீசப்பட்ட காலி மது பாட்டில்களை சேகரித்து வரும் வேட்பாளர்.Body:நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான டெபாசிட் பணத்தை செலுத்துவதற்காக தொகுதி முழுவதும் குடிமகன்களால் வீசப்பட்ட காலி மது பாட்டில்களை சேகரித்து வரும் வேட்பாளர்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அதன் தலைவர் நாங்குநேரி பேருந்து நிலையத்தில் இருக்கும் காலி மதுபாட்டில்களை எடுத்து அதனை விற்பனை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பணத்தை புரட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும் நாங்குநேரியில் மது ஆலை தொடங்குவது தான் தனது முக்கிய கோரிக்கை என்றும் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இடைத்தேர்தல் அறிவித்ததைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 21ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது இதுவரை 25 விண்ணப்பங்களை அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் பொதுமக்கள் என பலர் வாங்கி சென்றுள்ளனர். நேற்று தேர்தல் மன்னன் பத்மராஜன் சுயேச்சை வேட்பாளராக தனது மனுவை தாக்கல் செய்தார் மூன்றாவது நாளான இன்று வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவரவில்லை இந்த நிலையில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அதன் தலைவர் செல்லப்பாண்டியன் தனது வேட்புமனுவை வருகின்ற வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய உள்ளார் தனது வேட்புமனுக்கான வைப்பு தொகையை கட்டுவதற்கு நாங்குநேரி மற்றும் அதை சுற்றுபகுதியில் உள்ள காலி மது பாட்டில்களை எடுத்து அதை பழைய இரும்பு கடையில் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வேட்புமனுவை தாக்கல் செய்ய போவதாகவும் தெரிவித்தார். மேலும் மது குடிப்போர் தமிழகத்தில் மட்டும் 65 சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்றும் எங்களால் தான் தமிழக அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மது பிரியர்களை பாதுகாப்பதும் மது ஆலைகளை தமிழகத்திலும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியிலும் அமைப்பதுதான் தனது லட்சியம் என்றும் அதற்கான நடவடிக்கையில் தான் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

நாங்குநேரி தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக தான் தேர்தலில் இருப்பதாக கூறி வரும் இவரை பொதுமக்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.