இதுகுறித்து நெல்லை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் முத்துராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர், நெல்லை கோட்டாட்சியர் ஆகியோரிடம் தாக்கல் செய்யலாம். தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோரிடம் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தார்.
வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகளை சி1 படிவத்தின்படி பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத்தின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் அந்தந்த கட்சி தலைமை தங்கள் வேட்பாளரின் மேல் இருக்கும் வழக்குகள் மற்றும் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் குறித்த விவரத்தை தலைமை தேர்தல் அலுவலரிடம் தேர்தலுக்கு 48 மணிநேரத்திற்கு முன்பு தெரியப்படுத்த வேண்டும்.
இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.96 லட்சத்து 7 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என்றார்.