நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, தேர்தல் பறக்கும் படை குழுவினர், தமிழகம் முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இன்று பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல், வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 1.80 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வாகன ஓட்டுநரிடம் விசாரணை செய்த போது, காய்கறிகளை ஆலங்குளத்திலிருந்து கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ததின் மூலம் ஈட்டப்பட்ட பணம் என்று தெரிவித்தார்.
இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்வதாக தெரிவித்த பறக்கும் படை குழுவினர், பின்னர் தென்காசி வருவாய் வட்டாட்சியர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைத்தனர்.