கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தோப்பில் முகமது மீரான் (75). இவர் 1944 செப்டம்பர் 26ஆம் தேதி பிறந்தார். பிரபல எழுத்தாளரான இவர் சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
இவர் எழுதிய சாய்வு நாற்காலி என்ற நாவலுக்கு 1997ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. ஐந்து புதினங்கள், ஆறு சிறுகதைகள், சில மொழிபெயர்ப்பு நூல்களை முகமது மீரான் எழுதியுள்ளார். இன்று மாலை நெல்லையில் உள்ள பேட்டை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.