ETV Bharat / state

"மேஜிக் செய்து பால்வளத்துறையை மாற்ற முடியாது" - அமைச்சர் மனோ தங்கராஜ் - Thirunelveli news

சென்னையைப் போலவே நெல்லையில் புதிய இயந்திரங்களை தேவையான இடத்தில் அமைத்து அதிக அளவில் பால் உபப்பொருட்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

மேஜிக் செய்து பால்வளத்துறையை மாற்றிட முடியாது - அமைச்சர் மனோ தங்கராஜ்

author img

By

Published : May 24, 2023, 10:04 AM IST

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர் சந்திப்பு

திருநெல்வேலி: நெல்லையை அடுத்த ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள அரசு ஆவின் பாலகத்தில், நேற்று (மே 23) பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பால் கொள்முதல் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்படும் பகுதி, பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படும் பகுதி மற்றும் அவைகளை குளிர்வித்து சேமிக்கும் கிட்டங்கி என அனைத்தையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, முதல் தளத்தில் இருக்கும் நெய் மற்றும் பால்கோவா போன்ற ஆவின் பால் உப பொருட்கள் தயார் செய்யும் பகுதிகளையும் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். மேலும், அங்கு நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவு குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “பொதுமக்கள் மத்தியில் ஆவின் பாலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. திருநெல்வேலி ஆவின் பால் கையாளும் திறனை உயர்த்த முடிவு செய்து உள்ளோம். 45 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதலை 70 ஆயிரம் லிட்டராக உயர்த்த முயற்சி செய்து வருகிறோம்.

அதேபோல், பால் உற்பத்தியை பெருக்குவதற்கும் திட்டம் உள்ளது. இதற்காக இரண்டு லட்சம் கறவை மாடுகள் ஏற்பாடுகள் செய்தும், நிர்வாக ரீதியாக மாற்றங்கள் செய்ய உள்ளோம். மற்ற நிறுவனங்களுக்கு போட்டி பொருளாக ஆவின் பொருட்கள் தயார் செய்ய முயற்சி செய்கிறோம். நெல்லையில் ஆவின் பாலகத்தை வளர்ச்சி அடையச் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.

பால் கொள்முதலை அதிகரித்து பால் கையாளும் திறனை மேம்படுத்த உள்ளோம். இதன் மூலம் எங்கெங்கு வாய்ப்புகள் உள்ளதோ, அங்கு புதிய இயந்திரங்கள் அமைத்து பால் உபப் பொருட்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளோம். இதன் மூலம் திருநெல்வேலிக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும்.

ஆவின் உப பொருட்களைப் பொறுத்தவரை, நல்ல தரமான பொருளாக இருக்கும். விலை குறைவாக இருக்கும். இந்தத் துறையில் எங்களுக்கு சவால் என்னவென்றால், விவசாயிகளிடம் பாலை வங்கி மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறோம். ஆவடியில் பல்வேறு பிரச்னைகள் இருந்தது. அதை மெல்ல மெல்ல சரி செய்து வருகிறோம்.

குறிப்பாக, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் இருந்த பிரச்னையை வங்கி மூலமாக நேரடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். ஆவின் பால்வளத் துறையில் உடனடியாக மேஜிக் செய்து மாற்ற முடியாது. 35 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம் இது.

எனவே எடுத்தேன், கவிழ்த்தேன் என எதையும் செய்யாமல், முழுமையாக இந்தத் துறையை ஆய்வு செய்து அனைவரிடமும் கோரிக்கைகளை பெற்றுக் கொண்டிருக்கிறேன். ஆவின் வளர்ச்சிக்கு 4 வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இரண்டு மாதத்தில் அதற்கான விடை தெரியும்.

நெல்லை மாநகராட்சியிலும் எல்லா வகையான பால் உபப பொருட்களை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, சென்னையைப் போலவே நெல்லையிலும் புதிய இயந்திரங்கள் அமைத்து புது புது பால் உப பொருட்கள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்” என தெரிவித்தார். இதனையடுத்து, ஆவின் மேலாளர் மற்றும் அலுவலர்களிடம் ஆலோசனை கூட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் மேற்கொண்டார்.

இதையும் படிங்க: பால் கொள்முதலில் தீவிரமாக இறங்கும் 'அமுல்' - ஆவினுக்கு ஆபத்தா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.