ETV Bharat / state

இப்படியே பேசிக்கொண்டிருந்தால் சீமான் தனிமைப்பட்டு போவார் - அமைச்சர் ஜெயக்குமார் - by election campaign

திருநெல்வேலி: ராஜிவ் காந்தி குறித்து கூறிய கருத்தினை சீமான் தவிர்த்திருக்கலாம் என்றும் இதனால் சீமான்தான் தனிமைப்பட்டு போவார் எனவும் நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையின்போது அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

minister jeyakkumar
author img

By

Published : Oct 15, 2019, 11:14 PM IST

Updated : Oct 16, 2019, 6:32 AM IST

அக்டோபர் 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சீமான் ஒரு சந்தர்ப்பவாதி

"வந்தாரை வாழவைப்பவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு அனைத்து மக்களும் வாழும் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. குறுகிய வட்டத்திற்குள் சீமான் பேசிவருகிறார். பேசி சீமான் ராஜிவ் காந்தி குறித்து கூறிய கருத்தினை தவிர்த்திருக்கலாம். ராஜிவ் காந்தி கொலை ஒரு துயரச் சம்பவம். பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்தச் சம்பவத்தை சீமான் கையில் எடுத்து இதுபோன்ற விஷமமான கருத்துகள் சொல்வதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இதனால் சீமான்தான் தனிமைப்பட்டு போவார். இது குறித்து அரசும் தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதே ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இதற்கு முன்பு அவர் எப்படி பேசியிருக்கிறார் என்பதை பாருங்கள். தற்போது அப்படியே மாற்றிப் பேசியுள்ளார் இது அவரது சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

முன்னதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சீமானை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Intro:சீமான் ராஜிவ்காந்தி குறித்து கூறிய கருத்தினை தவிர்த்திருக்கலாம். இதனால் சீமான் தான் தனிமைபட்டு போய்விடுவார் என நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.Body:சீமான் ராஜிவ்காந்தி குறித்து கூறிய கருத்தினை தவிர்த்திருக்கலாம். இதனால் சீமான் தான் தனிமைபட்டு போய்விடுவார் என நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வருகின்ற 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக சார்பில் முதலவர், துணை முதல்வர் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் இங்கு தங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பரப்புரையின் போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,

திமுக ஆட்சி காலத்தில் மகளிர் சுயஉதவிக்குழு திட்டத்தில் ஐந்து ஆண்டுகளில் செலவு செய்த தொகை 5000 கோடி ஆனால் அதிமுக ஆட்சியில் இதுவரை 50,000 கோடி செலவு செய்துள்ளோம். தமிழகத்தில் மகளிர் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக இவ்வளவு செய்துள்ளோம். இதனை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனவே அவர் பொய் சொல்லி மக்களை திசை திருப்புகின்ற வேலையில் இருக்கின்றார், மக்கள் முன்பு இவை எடுபட போவதில்லை.

சீமான் அவர் ராஜிவ்காந்தி குறித்து கூறிய கருத்தினை தவிர்த்திருக்கலாம். ராஜிவ்காந்தி கொலை ஒரு துயர சம்பவம். பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தை சீமான் கையில் எடுத்து இதுபோன்ற விஷமமான கருத்துக்களை சொல்வதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இதனால் சீமான் தான் தனிமைபட்டு போய்விடுவார். இது குறித்து அரசும் தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதே ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இதற்கு முன்பு அவர் எப்படி பேசியிருக்கிறார் என்பதை பாருங்கள் தற்போது அப்படியே மாற்றி பேசியுள்ளார் இது அவரது சந்தற்ப்பவாததை காட்டுகின்றது.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அன்றே பெண்களுக்கான 33சதம் இடஒதுக்கீடை பெற்றுதந்தது அம்மாவின் அரசு மேலும் நாங்கள் தான் மகளிருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். திமுகவினர் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்றால் 2014ல் உள்ளாட்சி தேர்தல் நடந்திருக்கும். இவை அனைத்திற்கும் திமுக தான் காரணம் எனவே உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.Conclusion:
Last Updated : Oct 16, 2019, 6:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.