திருநெல்வேலி: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக, போதிய செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட்போனை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வாய் பேச இயலாதவர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள், பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கென ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன், 210 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2 லட்சத்து 87 ஆயிரத்து 790 ரூபாய் மதிப்பில் ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக இன்று (ஜூலை 3) 10 மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஸ்மார்ட்போன்களை வழங்கினார்.
இதையும் படிங்க: மேகேதாட்டு அணை விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்