ETV Bharat / state

திருச்செந்தூர் முருக பக்தர்களுக்கென தனி நடைப்பாதை: அமைச்சர் ஏ.வ வேலு உறுதி!

திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கென தனி நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு உறுதியளித்துள்ளார்.

பக்தர்களுக்கென தனிநடைபாதை
பக்தர்களுக்கென தனிநடைபாதை
author img

By

Published : May 24, 2023, 1:39 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், அமைச்சர்கள் மனோ தங்கராஜ், ராஜகண்ணப்பன், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு "நெல்லையில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருடம் முழுவதும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை செல்வதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும் எனவும் குரிப்பிட்டார். மேலும், அதற்காக அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு, முதலமைச்சரின் அனுமதியுடன் பக்தர்களுக்கென தனி நடைப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சாலை பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சாலைகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பொதுமக்களுக்கென்று புதிதாக ஒரு செயலி(APP) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், இந்த செயலி மூலம் மக்கள் சாலை தொடர்பான தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.

மேலும், மாநில நெடுஞ்சாலைகளில் மத்திய அரசின் 14 சுங்கச்சாவடிகள் இயங்கி வருவதாக குற்றம் சாட்டிய அமைச்சர் ஏ.வ.வேலு, அதனை அகற்ற வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் வேண்டுமென்றே கொள்கை முடிவு எனக்கூறி காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

இதையும் படிங்க; "மேஜிக் செய்து பால்வளத்துறையை மாற்ற முடியாது" - அமைச்சர் மனோ தங்கராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.