திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் பெண் ஒருவர் பேருந்தில் ஏறும்போது அங்கிருந்த சிறுவன் ஒருவன் அந்தப் பெண்ணிடமிருந்த கைப்பையைப் பிடுங்கியுள்ளான்.
பின்னர் பையை தன்னுடன் வந்த நபரிடம் கொடுத்துள்ளான். இதைக் கவனித்த பொதுமக்கள் சிறுவன், அவனுடன் வந்த இரண்டு பேரை பிடிக்க முயன்றனர். ஆனால் பையை வைத்திருந்த நபர் தப்பி ஓடிய நிலையில், சிறுவனையும், மற்றொரு நபரையும் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் சண்முகவடிவு நடத்திய விசாரணையில், சிறுவனுடன் வந்ந நபர் அந்தோணி என்பதும் பையுடன் தப்பி ஓடிய நபர் முத்து என்பதும் தெரியவந்தது.
மானாமதுரையைச் சேர்ந்த இவர்கள் மருதூரில் தங்கியுள்ளனர். இந்த நபர்கள் சிறுவனை வைத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டுவருவது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் தப்பி ஓடிய நபரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டவிரோத குழந்தைகள் காப்பகம்: 19 சிறார்கள் மீட்பு