ETV Bharat / state

நெல்லை ரவுடி நீராவி முருகன் என்கவுண்டர் திட்டமிட்டு நடைபெற்றதா? - நீராவி முருகன் என்கவுண்டர்

களக்காடு அருகே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ’நீராவி’ முருகன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

நெல்லை ரவுடி நீராவி முருகனின் என்கவுண்டர் திட்டமிட்டு நடைபெற்றதா?

author img

By

Published : Mar 18, 2022, 7:01 AM IST

நெல்லை: களக்காடு அருகே (மார்ச் 17) தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ’நீராவி’ முருகன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறைக்கு தண்ணி காட்டிய நீராவி முருகன்

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரவுடி நீராவி முருகன், கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாடு காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தவர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர். குறிப்பாக தலைநகர் சென்னையில் பெண்களைக் குறி வைத்து அவர்களிடம் நகைகளை மிரட்டி பறிப்பது தான் இவரது ஸ்டைல், அதிலும் சமீபத்தில் நடுரோட்டில் பெண் ஒருவரை கத்திமுனையில் மிரட்டி அவரது நகையை பறித்துச் சென்றார்.

அதேபோல், பல வழக்குகளில் காவல்துறையினர் இவரைக் கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை தாக்கிய சம்பவமும் உண்டு. ரவுடி நீராவி முருகன் மீது 3 கொலை வழக்கு உள்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தமிழ்நாடு ரவுடிகள் லிஸ்டில் முக்கிய இடம் பிடித்தவர் தான் இந்த நீராவி முருகன். இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழ்நாடு காவல்துறைக்கே தண்ணி காட்டி வந்த நீராவி முருகனை சமீபத்தில் பணிக்கு சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா சுட்டு வீழ்த்தியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்ச்சையில் சிக்கிய இசக்கி ராஜா

இந்த என்கவுண்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நீராவி முருகனை என்கவுண்டர் செய்த இசக்கி ராஜா தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். குத்துச் சண்டை வீரரான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு தான் காவல் பணியில் சேர்ந்தார். இவர் ஏற்கனவே நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பணிபுரிந்த போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். குறிப்பாக நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது இட்லி கடை உரிமையாளர் ஒருவரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கி கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

அப்போது பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக எஸ்ஐ இசக்கி ராஜா இடமாறுதல் செய்யப்பட்டார். மேலும், கோவில்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது அப்பகுதியைச் சேர்ந்த ரவுடிகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்து பிரபலமானார். மேலும், கோவில்பட்டியை சேர்ந்த ரவுடி ஒருவரை காலில் சுட்டு அப்போதே பெரும் சர்ச்சைக்கு ஆளானார். எனவே இதுபோன்று துணிச்சல் மிக்க காவலரான இசக்கி ராஜாவை பயன்படுத்தி தமிழ்நாடு காவல்துறை திட்டமிட்டு ரவுடி நீராவி முருகனை என்கவுண்டர் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

நீதிபதி விசாரணை

இந்த என்கவுண்டர் தொடர்பாக தற்போது நாங்குநேரி நீதிபதி பிரேம் கிஷோர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் என்கவுண்டரில் ஈடுபட்ட எஸ்ஐ இசக்கி ராஜா உள்ளிட்ட காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அவரது மேற்பார்வையில் நீராவி முருகன் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே நீதிபதி விசாரணைக்கு பின்பு இந்த என்கவுண்டர் தொடர்பான முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:இலங்கைக்கு சுமார் ரூ.7,500 கோடி கடனுதவி செய்த இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.