ETV Bharat / state

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் நினைவு தினம்: கட்டுப்பாடுகள் தொடரும்!

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் கட்டுப்பாடுகள் தொடரும் என, மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் நினைவு தினம்
தோட்டத் தொழிலாளர்கள் நினைவு தினம்
author img

By

Published : Jul 19, 2021, 9:57 PM IST

திருநெல்வேலி: தாமிரபரணியில் கொல்லப்பட்ட தேயிலைத் தொட்டத் தொழிலாளர்களின் 22ஆவது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்க மாநகரக்காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி, தங்களது கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கச் சென்றனர்.

ஊர்வலமாக வந்த தொழிலாளர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். தடியடியிலிருந்து தப்பிக்க, பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஓடினர். அப்போது 17 தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 23ம் தேதி, தாமிரபரணியில் உயிர்நீத்த தொழிலாளர்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தாமிரபரணி ஆற்றில், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பெருந்தொற்று கட்டுப்பாடு

கரோனோ தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தொற்று பாதிப்பு முற்றிலும் விலகாத நிலையில், இந்த ஆண்டு வரும் 23ம் தேதி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்று நடைபெற இருக்கும் அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக மாநகர காவல்துறை, துணை ஆணையர் சுரேஷ் குமார் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இன்று( ஜூலை 19) ஆலோசனை நடத்தினார்.

அப்போது கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஓவ்வொரு அமைப்பிலும் ஐந்து நபர்கள் மட்டுமே அஞ்சலி செலுத்த வர வேண்டும். கரோனா விதிமுறைகளை பின்பற்றி அஞ்சலி செலுத்த வேண்டும் தாங்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகளைத் துணை ஆணையர் தெரிவித்தார்.

காவல்துறையின் கட்டுப்பாடுகளுடன் வரும் 23ஆம் தேதி தாமிரபரணி ஆற்றங்கரையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் தலை தூக்கும் சாதி மோதல்: சென்னையில் பிரபல ரவுடி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.