திருநெல்வேலி மாவட்ட மாதர் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அதில், "நெல்லை மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன.
இதில் நுண் நிதி நிறுவனங்கள் பல குழுக்களை நடத்திவருவதோடு, பெண்களை தகாத வார்த்தைகளில் திட்டுவது, மிரட்டுவது, இரட்டை அர்த்தங்களில் பேசுவது ஆகிய வேலைகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.
தற்போது கரோனோ ஊரடங்கு காலத்திலும் பணத்தை கட்டும்படி பெண்களை மிரட்டுகின்றனர். ஒருமாத தவனை கட்ட தவறினால்கூட வட்டிக்கு மேல் வட்டி போட்டு கந்துவட்டி கூடாரம் போல் செயல்படுகின்றனர்.
இதனால் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவு எடுக்கும் அளவுக்கு செல்கின்றனர். எனவே நுண்நிதி நிறுவனங்களை தடை செய்வதுடன் ஊரடங்கு காலத்தில் குழு பெண்களிடம் தவணை வசூலிக்கக் கூடாது" என்று குறிப்பிட்டிருந்தனர்.