திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி நான்கு வழி சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சுங்கச்சாவடி அமைந்துள்ளது. அதன் இருபுறங்களிலும் தலா ஆறு லேன்கள் உள்ளன. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று நேற்றிரவு (மார்ச் 31) வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த லாரியானது சுங்கச்சாவடியின் எதிர் திசையில் இருந்த இரண்டாவது லேனில் வழியாக அதிவேகமாக புகுந்தது.
அப்போது அங்கு பணி செய்துகொண்டிருந்த கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஊழியர் மாரியப்பன் மீது ஏறிச்சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அங்கிருந்து நிற்காமல் சென்ற லாரியை சுங்கச்சாவடி ஊழியர்கள் விரட்டி பிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாங்குநேரி காவல் துறையினர் லாரியின் ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் உயிரிழந்த ஊழியரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்போது விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமரின் பரப்புரைக் கூட்டத்திற்கு சென்ற சபாநாயகர், அமைச்சரது வாகனங்கள் விபத்து