திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு தற்போது வரை மின் உற்பத்தி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி, இரண்டாவது அணு உலையில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பராமரிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து மின் உற்பத்தியானது இன்று காலை 8.30 மணி அளவில் மீண்டும் தொடங்கியது. இதுவரை 180 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்றுள்ளது.
தற்போது கூடங்குளத்தில் மூன்று, நான்காவது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதையும் படிங்க... கூடங்குளம் அணுக்கழிவுகள் அகற்றம் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்