ETV Bharat / state

கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் படத்திற்கு கனிமொழி மரியாதை - முன்னாள் மேயர் படத்திற்கு கனிமொழி மரியாதை

நெல்லை: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி படத்திற்கு திமுக எம்பி கனிமொழி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

kanimozhi
author img

By

Published : Jul 27, 2019, 4:29 PM IST

நெல்லையில் கடந்த 23ஆம் தேதியன்று முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை இந்த வழக்கு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

முன்னாள் மேயர் படத்திற்கு கனிமொழி மரியாதை

இந்நிலையில், இவர்களின் படத்திற்கு திமுக எம்.பி கனிமொழி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், உமா மகேஸ்வரியின் குடும்பத்தினர், பணிப்பெண் மாரியம்மாளின் மகள் ஆகியோருக்கு கனிமொழி ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அனைவரிடமும் இனிமையாகப் பழகக்கூடிய குணம் படைத்த உமா மகேஸ்வரியின் இந்த கொலை சம்பவம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Intro:நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி , அவரது கணவர் முருகசங்கரன் ஆகியோர் படத்திற்கு திமுக மாநில மகளிரணி செயலாளரும் , தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இவா்களுடன் கொலை செய்யப்பட்ட பணிபெண் மாரியம்மாள் இல்லத்திற்கும் சென்று ஆறுதல் கூறினார். இதில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை, அந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாக தெரிவித்தார்.
Body:
         
நெல்லை கடந்த 23-ந்தேதி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி , அவரது கணவர் முருகசங்கரன் , மற்றும் வீட்டின் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இவர்களது இல்லத்திற்கு திமுக மாநில மகளிரணி செயலாளரும் , தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். முதலாவதாக மேயர் உமாமகேஸ்வரி இல்லத்திற்கு வந்த அவர் உமாமகேஸ்வரி மற்றும் அவரது கணவர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவா்களின் மகள்கள் மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். தொடர்ந்து கொலையான பணிப்பெண் மாரியம்மாளின் இல்லத்திற்கும் சென்று அவரது மூன்று குழந்தைகளையும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.
         
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேயர் உமாமகேஸ்வலி அனைவரிடமும் இனிமையாக பழக கூடியவர் . கட்சி பணிகளில் தன்னை ஆர்வமாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்படும் சகோதரி . அவர் இப்படி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் , இதுவரை இந்த வழக்கில் யாரையும் கண்டுபிடிக்கவில்லை , கைது செய்யப்படவில்லை என்ற நிலையை பார்க்கும் போது அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தையும் , கோபத்தையும் உருவாக்கக்கூடிய நிலையை இந்த நிகழ்வு உருவாக்கியுள்ளது. என்ன காரணம் என்று தெரியாமல் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் , அந்த வீட்டில் பணியாற்றிய சகோதரியின் 3 குழந்தைகளும் அனாதையாக்கப்பட்டுள்ளார்கள் . இந்த கொலைகளுக்கான பின் புலம் என்ன என்பது கண்டுபிடிக்கப்படவில்லை , விரைவில் இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும் , விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும் , அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன், இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது மிக மோசமான சட்டம் ஒழுங்கை காட்டுகிறது, உண்மையாகவே விசாரணை நடக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
         
இந்த நிகழ்ச்சியில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உள்ளிட்ட திமுகவினர்கள் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.