நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டத்தில் புதிதாக
கட்டிக்கொண்டிருந்த வீட்டில் நள்ளிரவில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள்
வெடித்ததால் பரபரப்பு. காவல்துறை நடத்திய சோதனையில் மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டத்தில் புதிதாக
கட்டிக்கொண்டிருந்த வீட்டில் நள்ளிரவில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள்
வெடித்ததால் வீட்டின் பின்பக்க அறைகள் முற்றிலும் சேதம் அடைந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் மேலும் இரண்டு நாட்டு
வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக பல குற்ற வழக்குகளில்
தொடர்புடைய சகோதர்கள் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டம்
பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். விவசாயி . இவர் ஊதின் அருகில் உள்ள
பொத்தையில் புதிதாக வீடுகட்டி வருகிறார். வீடுகட்டும் பணி இறுதிகட்டத்தை
எட்டியநிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த வீட்டில்
பயங்கர சத்தத்துடன் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தது. இதில் அந்த
வீட்டின் பின்பக்க அறைகள் முழுவதும் சோதம் அடைந்தது. இதுபற்றி
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் தலைமையில்
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் மேலும்
வெடிக்காத இரண்டு வெடிகுண்டுகள் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.
மேலும் கணேசனின் இரண்டு மகன்கள் சிவா என்ற நாராயணன் , அருள் ஆகிய
இருவர் மிதும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. எனவே
இவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக வெடிகுண்டுகள் வைத்திருந்தார்களா
அல்லது யாரையும் கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டுகளை பதுக்கி
இருந்ததார்களா என விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவாக உள்ள
இருவரையும் தேடிவருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர
சோதனையில் ஈடுபட்ட போது கீழப்பாட்டம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக
நின்று கொண்டிருந்த சத்திரம் புதுக்குளத்தைச் சேர்ந்த அருண், கீழநத்தம்
பகுதியைச் சேர்ந்த மகராஜன் ,கண்ணன் , பேட்டையைச் சேர்ந்த கண்ணையாக
ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் இவர்களிடம் அனுமதியின்றி டெட்டனேட்டர்
குச்சி , வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய
தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் தாமிரபரணி ஆற்றில் வெடி வைத்து
மீன்பிடிப்பதாக தெரியவந்தது. இருந்த போதும் 4 பேரையம் போலீசார் கைது
செய்து வேறு நோக்கத்திற்காக வெடிபொருட்கள் வைத்திருந்தார்களா என
விசாரித்து வருகின்றனர்.