திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவர் யூசுப் என்ற பாபா யூசுப். ஹோட்டல் ஊழியரான இவர், அவரது முகநூல் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இரு பிரிவினரிடையே மத மோதலை உண்டாக்கும் வகையில் இருப்பதாக கூறி நெல்லை தியாகராஜநகரை சேர்ந்த லெனின் ரகுமான் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் மேலப்பாளையம் காவல்துறையினர் யூசுப் என்ற பாபா யூசுப் மீது மத நல்லிணக்கத்திற்கு பாதகமாக செயல்படுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாபா யூசுப், சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பருத்தி பஞ்சு பதுக்கல்..பியூஷ் கோயலைச் சந்திக்கும் ஜவுளி உற்பத்தியாளர் சம்மேளனம்