தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் மத்திய மாவட்டங்களிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. மேலும் கடந்த சில தினங்களாக வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியது.
இந்நிலையில் நெல்லை பகுதியில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து நெல்லை மாநகரப் பகுதிகளான டவுன், கேடிசி நகர், பாளையங்கோட்டை மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.