ETV Bharat / state

'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' நடத்திய GovTech Thon போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.7.50 லட்சம் பரிசு

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' நிறுவனம், நெல்லை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கெளவ்டெக்தான் (GovTech Thon) என்ற போட்டி நடத்திய நிலையில், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏழரை லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

‘ஸ்டாட் அப் தமிழ்நாடு’ நடத்திய GovTech Thon போட்டி
‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ நடத்திய GovTech Thon போட்டி
author img

By

Published : May 1, 2022, 8:19 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு தொழிலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' நிறுவனம் மூலம் உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக நெல்லை மாவட்ட நிர்வாகம் 'ஸ்டார்ட்அப் தமிழ்நாடு' நிறுவனத்துடன் இணைந்து அரசுத்துறைகளில் கணினியின் செயல்பாடுகளை மேலும் அதிகரிக்கும் வகையில் கெளவ்டெக்தான் (GovTechThon) போட்டியை அறிவித்தது. அதில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு ஏழரை லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்றது.

தொழில் துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுத்தொழிலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு ’ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ நிறுவனம் மூலம் நெல்லை மாவட்ட நிர்வாகம் இணைந்து கெளவ்டெக்தான் (GovTechThon) என்ற பெயரில் போட்டிகளை கடந்த டிசம்பர் மாதம் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அறிவித்தது.

உணவுப்பொருள்களில் கலப்படத்தைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் செயலி, தனி நபர்களின் சமூக பொருளாதார கல்வித்தகுதிகள் ஆகிய விவரங்களின் அடிப்படையில் ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை எளிதாக பட்டியலிட்டு கொடுக்கும் வகையிலான செயலி, ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் வடிவமைக்கும் அமைப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக்கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய புதிய வகையிலான தீர்வுகள் என நான்கு வகை போட்டிகளை அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 526 குழுக்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் பல்வேறு கட்டங்களைக் கடந்து தர வரிசையில் முன்னிலையில் உள்ள 12 குழுக்களுக்கான இறுதிப் போட்டிகள் இன்று (மே 01) நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது. பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் முன்னிலையில் அவைகள் சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு ஆய்வுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கணினி சார்ந்த தொழில் முனைவோர்களும், கல்லூரி, பள்ளி மாணவ - மாணவிகளும் கலந்து கொண்டனர். இது தங்களுக்குப் புதிய அனுபவமாக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் இந்தப் புதிய முயற்சி பாராட்டத்தக்கது என இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தாங்கள் கண்டுபிடித்த செயலி குறித்து சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவன் கூறுகையில், “தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை தாங்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று திரட்டி, அதனைக் கணினி செயலி வழியாக ஒவ்வொரு பொதுமக்களுக்கும், அவர்களின் தகுதிக்கு ஏற்ப என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எளிமையாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எங்களது செயலி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் அஜித் கூறுகையில், “கல்லூரி மாணவர்கள் - மாணவிகள் மற்றும் சாஃப்ட்வேர் நிறுவனங்களின் குழுக்களிடையே பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப்பின்பு சென்னையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இதில் பரிசுகளை பெற்றுள்ளனர். இது அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

‘ஸ்டாட் அப் தமிழ்நாடு’ நடத்திய GovTech Thon போட்டி

’ஸ்டார்ட் அப் என அழைக்கப்படும் புதுத்தொழிலில் ஈடுபட விரும்பும் கல்லூரி மாணவ - மாணவியரை ஊக்கமளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு திருநெல்வேலியை தென்மண்டல மையமாக வைத்து செயல்பட உத்தரவிட்டுள்ளது. விரைவில் இதற்கான புதிய மையம் நெல்லையில் செயல்படத்தொடங்க உள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள பள்ளி கல்லூரியைச் சேர்ந்த அனைத்து துறை மாணவ - மாணவியருக்கு தொழில் தொடங்க அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் வழிகாட்டுதலும் எளிதாக கிடைக்கும்’ என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.

மேலும், ’தமிழ்நாடு அரசு திட்டங்களிலுள்ள சில சிக்கல்களுக்கு எளிதில் தீர்வுகாணும் வகையில் ஒவ்வொரு பொதுமக்களிடமும் தீர்வு இருக்கும். அதை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற நிறுவனங்களின் தீர்வுகள் அரசுத் துறை வல்லுநர்களுடன் இணைந்து அதனை மேம்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

போட்டியில் கலந்து கொண்டவர்களும் தங்களின் பரிசுத்தொகையைவிட அரசு திட்டங்களில் வெற்றியில் தங்களது பங்களிப்பு இருப்பது தங்களுக்கு மிகுந்த ஆத்ம திருப்தியை ஏற்படுத்துவதாக’ இதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சமஸ்கிருதத்தில் உறுதி மாெழி விவகாரம்: காத்திருப்பு பட்டியலில் டீன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.