ETV Bharat / state

நெல்லையில் பைக் மீது லாரி மோதிய கோர விபத்து - குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு! - four include baby was dead by bike accident

திருநெல்வேலியில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இரண்டு பெண்கள், குழந்தை உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 6, 2023, 2:51 PM IST

Updated : Jul 6, 2023, 9:30 PM IST

பைக் மீது லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜன். இவரது சகோதரி இசக்கியம்மாள். இசக்கிராஜன் தனது சகோதரி இசக்கியம்மாள், தாய் சரஸ்வதி மற்றும் இசக்கியம்மாளின் 2 வயது குழந்தை என நான்கு பேரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கல்லிடைக்குறிச்சியில் இருந்து பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அம்பாசமுத்திரம் பாபநாசம் சாலையில் உள்ள ரயில்வே சந்திப்பு அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த டிப்பர் லாரி ஒன்று இசக்கிராஜன் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு வயது குழந்தை உள்பட நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இசக்கியம்மாள், சரஸ்வதி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இசக்கிராஜன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.

இது குறித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் டிப்பர் லாரியை விக்கிரமசிங்கபுரதைச் சேர்ந்த அசோக் என்பவர் ஓட்டி வந்ததும், டிப்பர் லாரியின் முன்பக்க அச்சு முறிந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்த்திசையில் சாலையின் ஓரமாக சென்றுகொண்டிருந்த இசக்கிராஜனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதும் காவல் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

லாரி ஓட்டுநர் அசோக்
லாரி ஓட்டுநர் அசோக்

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அம்பாசமுத்திரம் காவல் துறையினர், விபத்திற்கு காரணமான டிப்பர் லாரி ஓட்டுநர் அசோக்கை கைது செய்ததோடு லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தை கேள்விப்பட்டு இசக்கியம்மாள் சகோதரி சரஸ்வதியின் மூன்றாவது மகள் மற்றும் இளைய மகன் ஆகியோர் கதறி அழும் காட்சி மருத்துவமனையில் இருந்தோரை கண்கலங்க வைத்துள்ளது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு திருநெல்வேலி - நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னாக்குடி அருகே கார் ஒன்று சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். அதேபோல் நேற்று மாலை கேடிசி நகர் அருகே நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். எனவே நெல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: திருட்டு செல்போன்களை விற்க வந்த திருடன்.. சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்!

Last Updated : Jul 6, 2023, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.