ETV Bharat / state

ஜெயலலிதா சொத்து விபரம்; 2 ஆண்டுகளுக்குப் பிறகு பதிலளித்த ஆர்டிஐ.. அதிர்ச்சியில் வழக்கறிஞர்!

J.Jayalalitha Asserts: மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் சொத்து விபரங்கள் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய மனுவிற்கு, தற்போது சென்னை ஆட்சியர் அலுவலகம் பதிலளித்துள்ளது.

former-chief-minister-jayalalithaa-asset-details-rti-answered-2-years-later
ஜெயலலிதா சொத்து விவரம்: 2 ஆண்டுகள் பின்பு பதிலளித்த ஆர்டிஐ..அதிர்ந்து போன வழக்கறிஞர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 2:09 PM IST

திருநெல்வேலி: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் சொத்து விபரங்கள் குறித்து தகவல்களை கேட்டு, கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளார்.

இது குறித்து வழக்கறிஞர் பிரம்மா தனது மனுவில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதா? உச்ச நீதிமன்ற தீர்ப்பிலிருந்து எத்தனை நாட்களுக்குள் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது?

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முடக்கம் செய்யப்படாத சொத்துக்கள் என்னென்ன? முடக்கம் செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் விபரங்கள், அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள்” உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டிருந்தார்.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஆட்சியர் அலுவலகம் அனுப்பிய பதிலில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தி வருவதால், தற்போது தகவல் ஏதும் முழுமையாக கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே தனது விசாரணையை முடித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிக்கையையும் அரசிடம் தாக்கல் செய்து விட்டது.

இந்நிலையில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள பதிலில், ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாகவும், காலதாமதமாக பதில் வழங்கப்பட்டுள்ளதுடன் முறையான பதிலையும் வழங்கவில்லை என்று பிரம்மா கூறியுள்ளார்.

மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பதில் வழங்கப்பட்டுள்ளது என்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும்படி பதில் வழங்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் பிரம்மா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மார்கதர்சிக்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.