ETV Bharat / state

வைக்கோல் படப்பில் தீ விபத்து - fire accident

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் வயல் பகுதியில் நேரிட்ட தீ விபத்தில் வைக்கப்பட்டு இருந்த வைக்கோல் படப்புகள் முற்றிலுமாக எரிந்து போயின.

வைக்கோல் படப்பில் தீ விபத்து
author img

By

Published : Jul 22, 2019, 7:01 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மாருதி நகர் பகுதியில் கால்நடை வளர்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 10 படப்பு வைக்கோல் வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை இந்த படப்புகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவி அனைத்து படப்புகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடித் தீயை அணைத்தனர்.

கால்நடைத் தீவன வைக்கோல் படப்பில் தீ விபத்து

இந்த தீ விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் படப்புகள் எரிந்து நாசமாயின. இது குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:நெல்லை பாளையங்கோட்டை மாருதி நகர் பகுதியில் கால்நடைத் தீவனமான வைக்கோல் படப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் 10 க்கும் மேற்பட்ட படப்புகள் எரிந்து நாசமாயின. தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு வாகனங்களில் வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் படப்புகள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. Body:
         
பொதுவாக பருவமழை பெய்து கடும் வறட்சி நிலவி வருவதால் கால்நடை தீவனத்திற்கும் கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வைக்கோல் கிடைப்பதும் அரிதாகி வருகிறது. தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நடத்த விவசாயத்தின் மூலம் ஓரளவு கிடைத்த கால்நடைத் தீவனமான வைக்கோலை அதிக விலைகொடுத்து வாங்கி விவசாயிகள் சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை மாருதிநகர் பகுதியில் கால்நடைகள் வளர்பில் ஈடுபட்டு வரும் செல்லையா ,வினோத் மற்றும் சொர்ணம் ஆகியோர் 10 படப்பு வைக்கோல் வைத்துள்ளனர். இதனிடையே இன்று காலை இந்த படப்புகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. கடும் காற்று வீசி வருவதால் தீ மளமளவென பரவி அனைத்து படப்புகளிலும் பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு வாகனங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் படப்புகள் எரிந்து நாசமாயின. இந்த விபத்து குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.