மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு, இன்று (பிப்.6) திட்டமிட்டபடி நடைபெற்றது.
விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் ஒன்றுகூடி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதன் பின்னர் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தியபடி வண்ணாரப்பேட்டை சாலையில் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புகாக நின்றிருந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகள்: அதிமுக தொண்டர்கள் அலப்பறை