திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, 'நெல்லை வசந்தன்' பிரபல ஜோதிடர் ஆவார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ராசிபலன் மற்றும் வருட கணிப்புகளை கூறிவந்தார்.
குறிப்பாக தமிழ்நாட்டில், நிகழும் சம்பவங்கள், வரபோகும் நிகழ்வுகள் குறித்தும் பலமுறை நெல்லை வசந்தன் கணித்து கூறியுள்ள சம்பவங்களில் சில துல்லியமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜோதிடர் நெல்லை வசந்தன் இன்று காலை திடீரென காலமானார்.