ETV Bharat / state

பள்ளி சுவர் விபத்து விவகாரம்; அம்பலமான அனுமதிச் சான்றிதழ்கள்? - பள்ளி சுவர் விபத்து விவகாரத்தில் வெளியான அனுமதி சான்றிதழ்கள்

திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், விபத்துக்குள்ளான பள்ளிக்குப் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அளித்த அனுமதிச் சான்றிதழ்கள், தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/19-December-2021/13954251_school2.jpg

author img

By

Published : Dec 19, 2021, 10:57 PM IST

திருநெல்வேலி சாஃப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 6 மாணவர்களும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக பள்ளி தாளாளர், கட்டட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், பள்ளி கழிவறை இடிந்து விழுந்ததற்கு அடித்தளம் இல்லை என்பதே காரணம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் விபத்து நடைபெற்ற பள்ளி இயங்கத் தேவையான சான்றிதழ்கள் பெறப்பட்டது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வருவாய் துறையினரின் சான்றிதழ்
வருவாய்த் துறையினரின் சான்றிதழ்

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் ஆகஸ்ட் மாதம் விபத்து நடைபெற்ற பள்ளிக்கு சுகாதாரச் சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதாரச் சான்றுக்கு தேவையான உறுதித்தன்மை சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று போன்றவையும் பள்ளி நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத்துறையினரின் சான்றிதழ்
தீயணைப்புத்துறையினரின் சான்றிதழ்

மேலும் இப்பள்ளிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வருவாய்த்துறை சார்பில், மூன்று ஆண்டுகள் காலம் செல்லுபடியாகும் வகையிலான கட்டடச் சான்றும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தீயணைப்புத்துறையின் தடையில்லாச் சான்றும் வழங்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறையினரால் வழங்கப்பட்ட உறுதிச்சான்றின் அடிப்படையிலேயே பிற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைசார்ந்த அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பள்ளியில், சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.