ETV Bharat / state

ஏற்றுமதியில்லை... சீசனில் போதிய விற்பனையும் இல்லை: நெருக்கடியில் உழலும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் மண்பாண்டங்கள் கிராக்கி இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு மீத நாள்களிலாவது மண்பாண்டங்களை அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டுமென்பதே நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

மண்பாண்ட
மண்பாண்ட
author img

By

Published : Jun 16, 2020, 4:20 PM IST

முந்தைய காலங்களில் பெரும்பாலான வீடுகளில் மண்பாண்டங்களில்தான் உணவு சமைக்கப்பட்டது. மண் பானையில் சாதம் செய்து அதை வாழை இலையில் சுடச்சுட பரிமாறினால், அந்த கணம் சொர்க்கம்தான். ஆனால் நாகரிக யுகத்தில் தண்ணீர் குடிக்க மட்டும்தான் மண்பானைகள் பயன்படுத்தப்படுகின்றன. மண்ணால் செய்யப்பட்ட சில பொருள்களை அழகுக்காக மக்கள் வாங்கத் தொடங்கினர்.

மண்பாண்டங்களில் செய்யப்படும் உணவின் சுவையும், ஆரோக்கியமும் இன்றளவும் சிலர் இதை விரும்பி வாங்க காரணம். போதிய விற்பனையின்றி ஏற்கனவே நலிவடையும் தொழிலாக மாறிய மண்பாண்ட தொழில் ஊரடங்கில் முற்றிலும் வலுவிழந்துபோனது.

மண்பாண்டங்கள்
மண்பாண்டங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, காருகுறிச்சி, கூனியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மண்பாண்ட தொழிலுக்கு பெயர் பெற்றவை. இந்த பகுதியில் களிமண்ணுடன் தாமிரபரணி நீர் சேர்த்து மண்பாண்ட கலவை உருவாக்கப்படுகிறது. இதனால் இதற்கு தனி சுவை உருவாகிறது என அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை இருக்கிறது.

மண்பாண்டம் செய்யும் இடம்
மண்பாண்டம் செய்யும் இடம்

மண்பாண்ட உற்பத்தி கோடை காலத்தில்தான் சூடுபிடிக்கும். இந்த காலங்களில் மண்பாண்டம், பூ ஜாடி, தண்ணீர் ஜாடி, டம்ளர் உள்ளிட்ட பொருள்கள் தயார் செய்யப்பட்டு கேரளா, கர்நாடக போன்ற மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இவை வெளிமாநிலங்களுக்கு மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, சேரன்மகாதேவி கூனியூர் பகுதியில் மண்பாண்ட குளிர்சாதனப்பெட்டி செய்யப்படுகிறது. இதில் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை கெடாமல் பாதுகாத்து வைக்கமுடியும். இதற்கு கேரள மாநிலம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்களின் பொருளாதார சிக்கல் குறித்த காணொலி

இந்நிலையில் கரோனா நெருக்கடியால் அரும்பாடு பட்டு செய்த மண்பாண்டங்களை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியவில்லை. இதனால், தொழிற்கூடங்களில் பொருள்கள் ஏற்றப்பட்ட நிலையில் அனுப்பி வைக்க முடியாமல் தேங்கியுள்ளன. ஏற்றுமதி செய்யப்பட முடியாததால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மண்பாண்ட பொருள்கள் தொழிற்கூடங்களில் குவிந்துகிடக்கின்றன.

குறிப்பாக தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் மண்பாண்டங்கள் கிராக்கி இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு மீத நாள்களிலாவது மண்பாண்டங்களை அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டுமென்பதே திருநெல்வேலி மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கண்டுகொள்ளப்படாத மண்பாண்டங்கள்: நொறுங்கிய மண்பாண்டத் தொழில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.